Published : 01 Dec 2016 10:08 AM
Last Updated : 01 Dec 2016 10:08 AM

வருமான வரி பிடித்தத்துக்கான ‘டிடிஎஸ்’ படிவங்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

வருமான வரி பிடித்தம் செய்யப் படும் ‘டிடிஎஸ்’ படிவங்களை ஆன்லைன் மூலம் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ஸ்ரீ வத்சவா நேற்று தொடங்கி வைத்தார்.

திட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

வருமான வரி பிடித்தம் செய் யாமல் இருப்பதற்காகவோ அல்லது குறைவாக வருமான வரி பிடித்தம் செய்யவோ உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகும் அதிகமாக வருமான வரி பிடித்தம் செய்யப் படுவதாக பலருக்கு மனக்குறை இருக்கிறது. அவ்வாறு இருந்தால் அதுகுறித்து வருமான வரி அலுவல கத்துக்கு நேரில் சென்று விண் ணப்பிக்க வேண்டும். இனிமேல் வரு மான வரி அலுவலகத்துக்கு சென்று காத்திருந்து விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகும்.

இந்தியாவில் ஆமதாபாத், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக சென்னையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை வருமான வரி செலுத்துவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய மத்திய அரசு டிஜிட்டல்மயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. வருமான வரித்துறையும் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஈடுகொடுத்து டிஜிட்டல்மயமாக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இது வருங்கால சந்ததியினருக்கு பெரிதும் பயனளிக்கும் என்றார்.

முன்னதாக வருமான வரித்துறை ஆணையர் சேகரன் வரவேற்றார். ஆணையர் முரளிமோகன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x