Published : 18 Dec 2022 04:25 AM
Last Updated : 18 Dec 2022 04:25 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்தவழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வழக்குகளில் ஆஜராகி வாதிட ஏற்கெனவே கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அவரை தென் இந்திய உயர் நீதிமன்றங்களுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகநியமித்துள்ள மத்திய அரசு,சென்னை உயர் நீதிமன்றத்துக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்தவழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசனை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இவர், மறைந்த உச்ச நீதிமன்றநீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT