

ராமநாதபுரம்: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் ரூ.317 கோடி செலவில் மறுவாழ்வுத்துறை மூலம் இலங்கை தமிழர்களுக்கு 3,500 வீடுகள் கட்டும் பணி நடந்து வருவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுபான்மையினர் தனி அலுவலர் நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கிணங்க முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் தனி அலுவலர்களை முதல்வர் நியமித்தார். 2-ம் கட்டமாக 5 மாவட்டங்களில் நியமிக்கப்பட உள்ளனர். அதில் முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி அலுவலர் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழர்களுக்காக ரூ.317 கோடி செலவில் 3,500 வீடுகள் கட்டும் பணி 19 மாவட்டங்களில் நடக்கிறது.
உலமாக்களுக்கு நல வாரியம் செயல்படுத்தப்பட்டு வருவது போல், கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கும் தனி நல வாரியம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுஉள்ளார் என்றார்.