

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்ர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை வகுக்க இருக்கிறது. குறிப்பாக இக்கொள்கை குறித்த சுப்ர மணியம் கமிட்டியின் அறிக்கையை வெளிப்படையாக உடனே வெளியிட வேண்டும். இதில் உள்ள முக்கிய அம்சங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையில் இடஒதுக்கீடு கொள்கையும் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் பிரதிநிதிகள், கல்வி யாளர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் ஆகி யோர் கொண்ட குழுவை அமைத்து கருத்துகளை கேட் டறிய வேண்டும். அவர்களின் பெரும்பாலான கருத்தின் அடிப்படையிலும் பொதுமக்கள் நலன் கருதியும் தேசிய கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும்.
எனவே, நாட்டு மக்களின் கல்விக்கும், ஆசிரியர்களின் பணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், மாநில வளர்ச்சி, நாட்டு முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்டு கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.