Published : 01 Dec 2016 09:55 AM
Last Updated : 01 Dec 2016 09:55 AM

சென்னை விக்டோரியா அரங்கை திரைப்பட ஆவணக் காப்பகமாக்க கோரிக்கை: மாநகராட்சி ஆணையரிடம் மனு

சென்னையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்ட விக்டோரியா ஹாலை தமிழ்த் திரைப்பட ஆவணக் காப்பகமாக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாக் குழு சார்பில் இந்த மனுவை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் நடிகை ரோகிணி தலைமையில் எடிட்டர் லெனின், இயக்குநர்கள் வசந்த் சாய், பாலாஜி சக்திவேல், எஸ்.பி.ஜனநாதன், ராஜூமுருகன், ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், தமுஎகச மாநில துணைத் தலைவர் மயிலை பாலு, விழாக்குழு செயலாளர் கி.அன்பரசன் ஆகியோர் வழங்கினர்.

இது குறித்து நடிகை ரோகிணி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

1916-ம் ஆண்டு வேலூர் நடராஜ முதலியாரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் சலன திரைப்படம் ‘கீசகவதம்’. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ்த் திரைப்படத்திற்கு வயது நூறு.

இதையொட்டி தமுஎகச தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாக் குழு சார்பில் ஒரு வருடம் கொண்டாட இருக்கிறோம். அதன் தொடக்க விழா டிசம்பர் 2ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் இயக்குநர் கோவிந்த் நிஹலானி, முதுபெரும் திரைப்பட நடிகை எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ம் தேதி லயோலா பொறியியல் கல்லூரி வளாகத்தில் முழு நாள் கருத்தரங்கம் நடைபெறு கிறது.

அதன் முன்னோடியாக தமிழ்த் திரைப்பட நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் சலன படமும், முதன் முதலாக குறும் படங்கள் திரையிட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலை தமிழ்த் திரைப்பட ஆவணக் காப்பமாக உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர் மனுவை பரிசீலனை செய்வதாகவும் முதல மைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், தலைமைச் செய லாளர் ஆகியோருக்கு மனு அளிக்குமாறும் கூறினார். இதுகுறித்து தானும் பரிந்துரை செய்கிறேன் என்றும் தெரி வித்தார்.

இவ்வாறு ரோகிணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x