அமர்நாத் புனித யாத்திரை - 9,153 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பயணம்

அமர்நாத் புனித யாத்திரை - 9,153 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பயணம்
Updated on
1 min read

ஜம்மு: ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து ஞாயிற்றுக்கிழமையன்று 9,153 பக்தர்கள் புனித அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கப் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2,345 பெண்கள் மற்றும் 18 குழந்தைகள் உட்பட மொத்தம் 9,153 பக்தர்களைக் கொண்ட 11-வது குழுவினர், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 359 வாகனங்களில் புறப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள நுன்வான் ஆகிய இரண்டு முகாம்களுக்கு பக்தர்கள் இரண்டு தனித்தனி வாகன அணிவகுப்புகளாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

3,429 பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் அதிகாலை 2:44 மணியளவில் பால்டால் முகாமை நோக்கி புறப்பட்டன; அதேவேளையில், 5,724 பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் அதிகாலை 3:35 மணியளவில் நுன்வான் முகாமை நோக்கி புறப்பட்டன.

ஜூலை 3-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இயற்கையாக உருவான பனிலிங்கம் அமைந்துள்ள இந்தக் புனித குகைக் கோவிலில் 2.30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை வழிபாடு செய்துள்ளனர். 57 நாட்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரை, ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமர்நாத் புனித யாத்திரை - 9,153 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பயணம்
“எங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி” - ஜம்மு காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in