கரூரில் முருங்கைப் பூங்கா அமைக்க 15 நாட்களில் இடம் தேர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை பார்வையிடும் அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூர் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை பார்வையிடும் அமைச்சர் செந்தில்பாலாஜி
Updated on
1 min read

கரூர்: "கரூரில் முருங்கைப் பூங்கா அமைப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் வழங்கியிருக்கிறார். இன்னும் 15 தினங்களுக்குள் முருங்கைப் பூங்கா அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்" என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரூரில் கலைஞர் பெயரில் அமையவுள்ள இந்தப் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு, தமிழக முதல்வர் விரைவில் திறந்துவைக்க இருக்கிறார்.

கரூரில் அதிகளவில் விளைவிக்கப்படும் முருங்கையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அதேபோல் முருங்கைக்கான கொள்முதலை செய்ய வேண்டும் என்பதும் மக்களின் நீண்டகால கோரிக்கை. மக்களின் இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கரூரில் முருங்கைப் பூங்கா அமைப்பதற்கான உத்தரவுகளை வழங்கியிருக்கிறார்.

இன்னும் 15 தினங்களுக்குள் முருங்கைப் பூங்கா அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். விரைவில் கரூரில், குறிப்பாக அரவக்குறிச்சியில் முருங்கைப் பூங்கா அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளது" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in