

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா நேற்றும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது உடல் 6-ம் தேதி நல் லடக்கம் செய்யப்பட்டது. இதை யடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு விவாதங் களும் விமர்சனங்களும் எழுந்தன.
இதற்கிடையே, கடந்த 7-ம் தேதி முதல் தினமும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலை மையிலான அமைச்சர்கள், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள், சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பதற்கான விடை நேற்று முன்தினம் கிடைத்தது. அதிமுக பொதுச்செயலாளராக தகுதி யானவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.பொன் னையன் நேற்று முன்தினம் காலை அறிவித்தார். அன்று மாலையே மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள், சசிகலாவை சந்தித்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தினர். சசிகலாதான் பொதுச்செயலாளராக தகுதியான வர் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இதை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் சிலர் போயஸ் தோட்டம் வந்தனர். அங்கு, சசிகலாவுடன் அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி னர். முன்னதாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பி துரையும், ‘அதிமுகவை கட்டுக் கோப்பாக நடத்திச் செல்ல சசிகலா வால் மட்டுமே முடியும்’ என தெரி வித்தார். மாநிலங்களவை உறுப்பி னர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பச்சைமால், ஜெயபால், டி.கே.எம்.சின்னையா உள்ளிட்டோரும் சசிகலாவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளராக சசி கலாவை தேர்வு செய்வதற்கான முழு மையான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. முதல்கட்ட மாக, கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 50 மாவட்டங்களிலும் மாவட்ட அதிமுக நிர்வாகங்கள் சார்பில் சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை தலைமைக்கு அனுப்பப் படுகிறது. மேலும் ஜெயலலிதா பேரவை, இளைஞர், இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் இதே போல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கட்சியின் செயற் குழு, பொதுக்குழுவை விரைவில் கூட்டி, பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வ தற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.