

காலியிடங்களை நிரப்ப தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல தனியார் பொறி யியல் கல்லூரிகள் சங்கம் சார்பில், காலியிடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப்பட் டிருந்தது. இம்மனு நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசார ணைக்கு வந்தது.
கல்லூரிகள் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் ஆஜராகி வாதிட்டார்.
“பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதிதான் கலந்தாய்வு முடிகிறது. அதன்பிறகு, காலியிடங் கள் நிலவரத்தை அண்ணா பல் கலைக்கழகம் அறிவிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக் கும் அதிகமான இடங்கள் காலி யாக இருந்தன. இந்த ஆண்டு அதுபோன்று காலியிடங்கள் ஏற்படா மல் இருக்க, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். காலியிடங் களை நிரப்ப ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் அளித்தும், செப்டம்பர் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்” என்றார் அவர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “கலந்தாய்வு முடிந்த பின் ஏற்படும் காலியிடங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் 20-ம் தேதிக்குள் காலியிடங்களை நிரப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள் ளனர்.