

முன்னாள் ஆளுநரின் மகன் வீடும் கண்காணிப்பு
தமிழகத்தில் அடுத்தகட்ட சோதனை நடவடிக்கையை வரு மான வரித்துறையினர் இன்று தொடங்க உள்ளனர். முன்னாள் ஆளுநரின் மகன், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட் டோரின் வீடு, அலுவலகங்களில் விரைவில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின் வீடு, அலுவலகங் களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 4 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத 147 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப் படும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், நண்பர் வீடு என 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்தும் அதிக அளவில் பணம், தங்கக் கட்டிகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான மணல் வியாபாரிகள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
எந்நேரமும் கைது செய்யப் படலாம் என்ற தகவல் பரவிய நிலையில், ராமமோகன ராவ் திடீர் நெஞ்சுவலி என்று கூறி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு இன்று 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப் படுகிறது.
சேகர் ரெட்டியுடன் தொடர்புடை யவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கக் கட்டிகள், ரொக்கம், சொத்து ஆவணங்கள் சிக்கியதால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழகம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். ராமமோகன ராவின் வீடு, அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள டைரி, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள்தான் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துருப்புச் சீட்டாக உள்ளது.
அதை வைத்து அடுத்தகட்ட சோதனையை இன்று தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக விடுமுறை நாளான நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத் தில் ஏற்கெனவே உள்ள 80 அதிகாரிகளுடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து மேலும் 60 அதிகாரிகள் வரவழைக் கப்பட்டுள்ளனர். ஆலோசனைக் குப் பிறகு அதிகாரிகள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, கோவை, நெல்லை என பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆளுநராக இருந்த ஒருவரின் மகன் வீடு சென்னையில் உள்ளது. அவரின் வீட்டிலும் சோதனை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது. இதேபோல, முன்னாள் தலைமைச் செயலாளர், தற் போது முக்கிய பொறுப்பில் உள்ள 2 செயலாளர்களின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்த வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரி களுக்கு உதவுவதற்காக 20 கம்பெனி துணை ராணுவத்தினர் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ராமமோகன ராவின் உடல்நிலை குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவரது மகன் விவேக், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.