அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து
Updated on
1 min read

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உடன் இருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளராக இன்று (சனிக்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார்.

பின்னர் பொதுச்செயலாளர் அறைக்குச் சென்று அங்கு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in