558 பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றம்: அமைச்சர் வேலுமணி தகவல்

558 பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றம்: அமைச்சர் வேலுமணி தகவல்
Updated on
1 min read

சென்னையில் பேருந்துகள் செல்லும் 558 பிரதான சாலை களில் விழுந்த மரங்கள் அனைத் தும் அகற்றப்பட்டுள்ளதாக அமைச் சர் எஸ்.பி.வேலுமணி தெரி வித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் வார்தா புயலால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச் சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி ஆகியோர் தலைமைவகித்து, பணிகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறும்போது, நிவார ணப் பணியில் வெளிமாவட்ட பணியாளர்கள் 3 ஆயிரத்து 572 பேர் உட்பட 22 ஆயிரத்து 983 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலை யில் விழுந்த 17 ஆயிரத்து 157 மரங்களில், 16 ஆயிரத்து 70 மரங்கள் தற்போது அகற்றப் பட்டுள்ளன. மீதம் உள்ள 1087 மரங்களை அகற்றும் பணி நடை பெற்று வருகிறது. 558 போக்கு வரத்து சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றப் பட்டுள்ளன. உட்புற சாலைகளில் விழுந்த மரங்கள் சில நாட்களில் அகற்றப்பட்டுவிடும். இதுவரை 65 ஆயிரத்து 489 டன் மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

புயலால் சேதமடைந்த 2 ஆயிரத்து 226 தெரு விளக்குகளில் 1643 விளக்குகள் சீரமைக்கப் பட்டுள்ளன. இதுவரை 545 இடங் களில் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டுள்ளன. புயல் நேரத்தில் மொத்தம் 7580 பேர் மீட்கப்பட்டு, 48 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதில் பெரும் பாலோனார் வீடு திரும்பிவிட்டனர். அவர்களுக்கு இதுவரை 6 லட்சத்து 44 ஆயிரத்து 17 உணவு பொட்டலங்கள் வழங்கப் பட்டுள்ளன. புயல் தொடர்பாக பெறப்பட்ட 3 ஆயிரத்து 584 புகார் களில், 1603 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன என்றார்.

அப்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in