வார்தா புயல் பாதிப்பு: அமைச்சர் ஆய்வு

வார்தா புயல் பாதிப்பு: அமைச்சர் ஆய்வு
Updated on
1 min read

வார்தா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரணப் பணி கள் துரிதமாக நடைபெற்று வரு கின்றன. திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங் களில் நடைபெற்று வரும் சீர மைப்புப் பணிகள் தொடர்பாக, மாமல்லபுரம் பேரூராட்சி அலு வலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நடைபெற்றது.

மாமல்லபுரத்தில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தலைமை நீரேற்று நிலையத்தில் சேதமடைந்த மின்கம்பங்களை, புதுக்கோட்டையில் இருந்து வந்துள்ள மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் இன்று முதல் பூஞ்சேரி கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் என கூட்டு றவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

திருப்போரூர்-செங்கல்பட்டு சாலை மற்றும் செம்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை ஆந்திராவில் இருந்து வந்துள்ள மின் பணி யாளர்கள் சீரமைத்து வருகின்ற னர். இந்த பணிகளை துரிதப்படுத் தப்பட்டுள்ளதாகவும், விரைவில் மின் விநியோகம் சீரடையும் எனவும் அப்போது அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in