4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்: ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார் ஐ.பெரியசாமி

தலைமைச் செயலகம் | கோப்புப் படம்
தலைமைச் செயலகம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சரவை ஐ.பெரியசாமியுடம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப் பிரமாணமும் ரகசியக்காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இலாகா மாற்றம்:

  • இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை கவனிப்பார்.
  • சிறப்பு திட்ட அமலாக்க துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வந்தார். அந்தத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், அமைச்சர் மதி வேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் முத்துச்சாமியிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் துறைகள் ஒதுக்கீடு:

  • அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in