

எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வரும் 24-ம் தேதி அதிமுகவினர் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அஞ்சலி செலுத்து கின்றனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது: அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 29-ம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 24-ம் தேதி வருகிறது. அன்று காலை 10.45 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.