Published : 14 Dec 2022 06:36 AM
Last Updated : 14 Dec 2022 06:36 AM

அகவிலைப்படி உயர்வை காலதாமதமின்றி வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாற்றிஓய்வுபெற்றவர்களுக்கு அகவிலைப்படியானது சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்திவழங்குவதுபோல் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அவ்வப்போது வழங்க வேண்டும்.

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வைஅறிவித்த மத்திய அரசு போன்று தமிழக அரசும் அறிவித்து வழங்கியிருக்க வேண்டும். இப்படி மத்திய அரசு உயர்த்தி, வழங்கும் அகவிலைப்படியானது எப்படிபயனுள்ள வகையில் மத்திய அரசுஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சரியான நேரத்தில் சென்றடைகிறதோ, அதேபோல் தமிழக அரசும்அவ்வப்போதே அகவிலைப்படி உயர்வை அறிவித்து காலதாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x