டிச.24 எம்ஜிஆர் நினைவு தினம் | நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் இபிஎஸ்

டிச.24 எம்ஜிஆர் நினைவு தினம் | நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைந்த டிச.24-ம் தேதி, அவரது நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், கடந்த 1987-ம் ஆண்டு டிச.24-ம்தேதி மறைந்தார். அவரது 35-வதுஆண்டு நினைவுநாளை முன்னிட்டு டிச.24-ம் தேதி காலை 10.30 மணிக்குசென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து, தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து, எம்ஜிஆர் நினைவிட நுழைவுவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in