

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை யொட்டி, பிஹார் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் அரசு துக்க தினம் அனு சரிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு இறைவன் அமைதி அளிக்கட்டும் என, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் வெளியிட்ட செய்தியில், ‘ஏழைகளின் தலைவரான, புகழ் பெற்ற, துணிச்சலான, சக்தி வாய்ந்த மற்றும் செயல்திறன் மிக்க தலை வியான அம்மாவின் இறப்பு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்கத்திலும் நேற்றைய தினம் அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஜெய லலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆழ்ந்த சோகத்துடனும், துக்கத்துடனும் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டர் மூலம் தகவல் வெளியிட்டார்.
அதேபோல் ஒடிசா சட்டப்பேர வையும் ஜெயலலிதா மறைவையொட்டி நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அவை கூடியதும், ஜெய லலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் நவீன் பட்நாயக் பேசும் போது, ‘ஜெயலலிதாவின் மறைவு தேசிய இழப்பு. இந்தத் தருணத்தில் தமிழக மக்களுக்கு ஒடிசா மக்கள் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப் பார்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்’ என்றார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபாநாயகர் சீதாசரண் சர்மா, நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையா, எதிர்க்கட்சித் தலைவர் பாலா பச்சன், பகுஜன் சமாஜ் உறுப் பினர் சத்யபிரகாஷ் சக்வார் ஆகியோர் பேசினர்.
சபாநாயகர் தலைமையில் 2 நிமிடங் கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 10 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் நாடு முழுவதும் பல இடங்களில் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.-பிடிஐ/ஐஏஎன்எஸ்