

சேலம், முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ஈடுபட்டார். அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்த பியூஸ் மானுஷை கடந்த ஜூலை 8-ம் தேதி போலீஸார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மத்திய சிறையில் அவர் இருந்தபோது, அங்கு பணியில் இருந்த ஜெயிலர் மருதமுத்து அவருக்கு ஆதரவாக இருந்ததாக தகவல் பரவியது. இது தொடர்பான உரையாடல் வாட்ஸ்அப் மூலம் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் துறைரீதியான விசாரணை மேற்கொண்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயி லர் மருதமுத்துவிடம் விளக்கம் கேட்டு சிறைத்துறை நிர்வாகம் மெமோ வழங்கியது. இந்நிலையில், சிறைத்துறை நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக நேற்று முன்தினம் ஜெயிலர் மருத முத்துவை, பணியிடை நீக்கம் செய்து, சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. மருதமுத்து நேற்று டன் பணி ஓய்வு பெற இருந்த நிலை யில், பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.