தொலைதூரக்கல்வி படிப்புக்கு டிச.30 வரை விண்ணப்பிக்கலாம்

தொலைதூரக்கல்வி படிப்புக்கு டிச.30 வரை விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இக்னோ தொலைதூரக் கல்வி படிப்புகளில் (2017 மாணவர் சேர்க்கை) சேர விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுகலை, இளங்கலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் சேர எந்த விதமான நுழைவுத்தேர்வும் கிடையாது. இந்தப் படிப்புகளில் சேர ஆன் லைனிலும் (www.onlineadmission.ignou.ac.in) விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மண்டல அலுவலகத்தை 044-24312766, 24312979 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இக்னோ இணையதளத்திலும் (www.ignou.ac.in) விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in