Published : 25 Dec 2016 12:13 PM
Last Updated : 25 Dec 2016 12:13 PM

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம், ராமச்சந்திரன் வீடுகளில் சோதனை

வருமான வரித்துறையிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கின

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை ராமச்சந்திர னின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவினர் நேற்று சோதனை நடத்தி னர்.

சட்டவிரோதமாக பணம், தங்கம் பதுக்கி வைத்துள்ளதாக தொழில் அதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் உள்ளிட்ட சிலரது வீடு, அலுவலகங்களில் வரு மான வரித்துறை, அமலாக்கப் பிரிவினர் சோதனை நடத்தினர். சோத னையின்போது ரூ.147 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் மற் றும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். சோதனையின் போது அவரது வீட்டில் கைப் பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப் படையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் லைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோ ருக்கு சேகர் ரெட்டியுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக புதுக்கோட்டை அருகேயுள்ள முத்துப்பட்டணத்தைச் சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரன், இவரது உறவினர் முத்துப்பட்டணத்தைச் சேர்ந்தவரும் திண்டுக்கல்லில் வசித்துவருபவருமான ரத்தினம் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர்.

தரணி குழுமம்

இந்நிலையில், நேற்று காலை திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள ரத்தினத்தின் வீடு, அதன் அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரத்தினத்தின் மனைவி செல்வி, இளைய மகன் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர். தொடர்ந்து, வீட்டுக்கு அருகில் உள்ள தரணி குழுமம் என்ற ரத்தினத்துக்குச் சொந்தமான நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

தரணி குழும நிறுவனத்தின்கீழ் செல்வி டிரான்ஸ்போர்ட், செல்வி சேம்பர், தரணி ரியல் எஸ்டேட், தரணி லேண்டு டெவலப்பர்ஸ், செல்வி மினரல்ஸ் ஆகிய நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 5 நிறுவனங்களுக்கும் தலைமை அலுவலகமாக, திண்டுக் கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

மேலும் வேதா கிரீன் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் 20 கோடி ரூபாய் செலவில் அரசு மானியத்துடன் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அலுவலகமும் தரணி குழும கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது.

அலுவலகத்தில் நடந்த சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டையில்..

இதேபோல் புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள முத்துப் பட்டணம் கிராமத்தில் மணல் ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரனின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று காலை வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர், புதுக் கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே நிஜாம் காலனியில் சமுத்திரா டவரில் உள்ள ராமச்சந்திரனின் அலுவலகத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இரு இடங்களிலும் மேற்கொள் ளப்பட்ட சோதனையின்போது, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மணல் குவாரி மூலம் ராமச் சந்திரனுக்கும் சேகர் ரெட்டிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதற் கிடையில் அமைச்சர் ஒருவர் மூலமும் இவர்களுடனான நெருக் கம் மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

எண்ணெய் நிறுவன அதிபர் வீட்டில் சோதனை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் வசித்து வருபவர் விக்டர்(40). இவரது தந்தை ஜேசு, அரிசி ஆலை நடத்தி வந்த நிலையில் மகன்களுக்கு பாகம் பிரித்து கொடுத்ததில் விக்டருக்கு அரிசி ஆலை ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, அரிசி ஆலைக்குப் பதிலாக தற்போது அங்கு எண்ணெய் நிறுவனம் நடத்தி வருகிறார் விக்டர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் நேற்று காலை வரை திருச்சி வருமான வரித்துறை (புலனாய்வு) உதவி இயக்குநர் யாசர் அராபத் தலைமையிலான வருமான வரித்துறை அலுவலர்கள் தொழிலதிபர் விக்டரின் வீடு, எண்ணெய் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். மேலும், அவரது வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் விக்டர், இப்பகுதியில் உள்ள வங்கியில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x