புயல் பாதித்த மக்களுக்கு இழப்பீடு வழங்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

புயல் பாதித்த மக்களுக்கு இழப்பீடு வழங்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த நவம்பரில் பெய்த கனமழையால் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது உருவான `மேன்டூஸ்’ புயலால் பெரிய பாதிப்பு இல்லை. புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறோம். இருப்பினும் 5-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் பாய்ந்தும், மழையாலும் உயிரிழந்துள்ளனர். கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. வீடுகள், குடிசைகள் சேதமடைந்துள்ளன.

கடலோர பகுதிகளில் மீனவர்களின் படகுகள், வலைகள்சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் கடல்நீர் உட்புகுந்துஉப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் வாழை மரங்கள் முறிந்துள்ளன.பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே, உயிரிழந்தவர்களுக்கும், வீடுகள், உடமைகளை இழந்த மக்கள், மீனவர்கள், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அதேபோல, கடந்த நவம்பரில்பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in