Published : 28 Dec 2016 09:28 AM
Last Updated : 28 Dec 2016 09:28 AM

நேரில் ஆஜராகாமல் பத்திரிகையாளர்களிடம் விளக்கம்: ராம மோகன ராவ் மீது நடவடிக்கை? - வருமான வரி அதிகாரிகள் ஆலோசனை

சம்மன் அனுப்பிய நிலையில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததால் ராம மோகன ராவ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழக தலைமைச் செய லாளராக இருந்த ராமமோகன ராவ், அவரது மகன் விவேக், நண்பர் அமலநாதன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் என ஒரே நேரத்தில் 14 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கோடிக்கணக்கான மதிப்புள்ள பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேரில் ஆஜராகும்படி ராம மோகனராவ், விவேக், அமலநாதனுக்கு வரு மான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். அமலநாதன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ராம மோகன ராவ், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி கடந்த 24ம் தேதி நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து 2 பேரும் எந்த நேரத்தி லும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராமமோகன ராவ் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டில் நேற்று காலை பத்திரிகை யாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, ‘‘வருமான வரித்துறை அதிகாரிகள் சட்ட விரோ தமாக தனது வீட்டில் சோதனை நடத்தினர்’’ என குற்றம் சாட்டினார்.

நேரில் வந்து விளக்கம் அளிப் பார் என காத்திருந்த வருமான வரித்துறை அகாரிகளுக்கு ராம மோகன ராவின் பேட்டி அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது பேட்டி குறித்த வீடியோ பதிவை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப் படுகிறது. இதைத் தொடர்ந்து ராமமோகன ராவ் மீது எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x