

சென்னையில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகரமான நிலையில் செல்போன் கோபுர கட்டமைப்புகளை வைத்துள்ள செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சட்டப்படி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கட்டமைப்பு இருந்தால், சம்பந்தப்பட்ட கட்டுமானத்தின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் மீது நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் உரிய பதில் அளிக்காவிட்டால் அபாயகரமான கட்டுமானத்தை அகற்றவும் செய்யலாம்.
தற்போது பல செல்போன் கோபுர கட்டுமானங்கள் அபாயகரமான இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு சுமார் 500-க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்ளன. அவற்றைப் பராமரித்து வரும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங் களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அந்தந்த மண்டல அலுவலகங்கள் மூலமாக நோட்டீஸ் அனுப்புமாறு ஆணையர் தா.கார்த்திகேயன் உத்தரவிட் டுள்ளார். அதன்படி தற்போது செல்போன் சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.