அதிமுகவில் மீண்டும் செல்வாக்கு பெற்றுள்ள டாக்டர் வெங்கடேஷ்

அதிமுகவில் மீண்டும் செல்வாக்கு பெற்றுள்ள டாக்டர் வெங்கடேஷ்
Updated on
1 min read

ஜெயலலிதாவால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த டாக்டர் வெங்கடேஷ், இப்போது கட்சிக்குள் மீண்டும் செல்வாக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் தோட்ட வளாகத்தில் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந் தவர் டாக்டர் வெங்கடேஷ். கட்சியிலும் அவரது செல்வாக்கு கிடுகிடுவென வளர்ந்தது. பின்னர் திடீரென அவரது கட்சிப் பொறுப்பு களை பறித்தார் ஜெயலலிதா. கட்சி நடவடிக்கைகளில் அவரது தலையீடு எதுவும் இல்லாத வகையில் விலக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில், இப்போது மீண்டும் போயஸ் தோட்டத்தில் வலம் வரத் தொடங்கியிருக்கிறார் டாக்டர் வெங்கடேஷ். ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டிருந்த ஜெய லலிதாவின் உடல் அருகிலேயே நின்று கொண்டிருந்தார் வெங்க டேஷ். இப்போது அதிமுகவில் அதிகார மாற்றத்துக் கான நிகழ்வுகள் வேக மாக நடந்து கொண்டி ருக்கும் நிலையில், அடுத்த பொதுச் செய லாளராக தேர்வு செய் யப்படுவார் எனக் கூறப்படும் சசிகலா உடனேயே இருக்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.

யார் இந்த வெங்கடேஷ்?

சசிகலாவின் அண்ணன் சுந்தர வதனத்தின் மகனான டாக்டர் வெங்கடேஷ், சென்னை ஆழ்வார் பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதத் தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியில் புதிதாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தொடங்கப் பட்டது. அதன் மாநிலச் செயலாளராக வெங்கடேஷ் நிய மிக்கப்பட்டார்.

இந்த அமைப்பின் முதல் மாநிலச் செயலாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்கக்கது. இந்த அமைப்பில் சுமார் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர்.

மேலும், அதிமுகவின் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் அந்தக் காலகட்டத்தில் பதவியில் இருந் தார் வெங்கடேஷ்.

கடந்த 2010- ம் ஆண்டில் கட்சிப் பொறுப்பில் இருந்து டாக்டர் வெங்கடேஷ் அதிரடியாக நீக்கப்பட்டார். தஞ்சை அருகே விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சேதப் படுத்தியதாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப் பட்டார்.

6 ஆண்டுகளாக விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது கட்சிக்குள் மீண்டும் இவரது செல்வாக்கு அதிகரித் துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in