

புயல், மழையால் சென்னையில் பல இடங்களில் நேற்று மின்கம்பங்கள் சாய்ந்தன. முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் நிறுத்தப்பட்டது. செல்போன் கோபுர கேபிள் அறுந்ததாலும், மின்சாரம் இல் லாததாலும் தொலைத் தொடர்பு சேவையில் தடங்கல் ஏற்பட்டது. அழைப்புகள் செல்லாததால் வீட்டைவிட்டு வெளியே சென்ற வர்களை தொடர்புகொள்ள முடி யாமல் உறவினர்கள் தவித்தனர்.