செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மழை விடுமுறை

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மழை விடுமுறை
Updated on
1 min read

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை (டிச.13) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செவ்வாய்க்கிழமை (டிச.13) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் திங்கட்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், முற்பகல் 10 மணி முதல் தொடர்மழை பெய்தது. இதேபோல், சென்னை புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் காலை முதலே கனமழை பெய்தது.

இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு திங்கட்கிழமை அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமைக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in