ரஜினிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இன்று பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.12), நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in