

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சேலம் செரிரோட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இதன் தலைவராக அதிமுக பிரமுகர் இளங்கோவன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சுரேஷ் தலைமையிலான சேலம், திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறையின் 18 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 64 கிளை வங்கிகள் இயங்கி வரு கின்றன. அவற்றின் மேலாளர்கள் அனைவரையும் வங்கி ஆவணங் களைக் கொண்டு வந்து சமர்ப்பிக் கும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கியின் தலைமை அலுவல கத்தில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலத்தில் 216 மற்றும் நாமக்கல்லில் 166 என மொத்தம் 382 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன.
பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான பின்னர் நவம்பர் 10-ம் தேதியன்று அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் அவற்றின் இருப்பு தொகையை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு வங்கி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் 41 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஒரே நாளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிக மான தொகை டெபாசிட் செய் யப்பட்டிருந்ததை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கூறியது:
வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஒரே நாளில் ரூ.82 லட்சம், கடம்பூரில் ரூ.43 லட்சம் என 41 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கூடுதலாக பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த தொகைகளை டெபாசிட் செய்தவர்கள் யார், அவர்களின் முழு விவரம் (கேஒய்சி) பெறப் பட்டுள்ளதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.