Published : 25 Dec 2016 10:16 AM
Last Updated : 25 Dec 2016 10:16 AM

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர், முதல்வர், கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சி.எச்.வித்யாசாகர் ராவ் (தமிழக ஆளுநர்)

தீய சக்திகளை அகற்ற இயேசு கிறிஸ்து இந்த உலகில் பிறந்தார். கிறிஸ்துமஸ் நாளில் துயரத்தில் இருக்கும் மக்களையும், பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களையும் காப்பாற்று வது நம் கடமை. உலகில் அமைதி யையும், மகிழ்ச்சியையும் நிலை நாட்ட அன்பையும், கருணை யையும் ஊக்கப்படுத்துவோம். அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

ஓ.பன்னீர்செல்வம் (முதல்வர்)

இயேசுபிரான் அவதரித்த கிறிஸ் துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன் என்று அன்பின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த இத்திரு நாளில், அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கு ஒருவர் அன்புபாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும். நாட்டிலேயே முதல்முறையாக, தமிழக கிறிஸ்தவ மக்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பரில் செயல்படுத்தினார். கிறிஸ்தவர்களால் பெரிதும் வர வேற்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,340 பேர் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

ஜெயலலிதா வகுத்த சீரிய திட்டங்களை, அவர் காட்டிய வழியில் அரசு சிறப்பான முறையில் தொடர்ந்து செயல் படுத்தும். இயேசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலக கெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்!

கருணாநிதி (திமுக தலைவர்)

கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வந்த மேலை நாட்டு மதகுரு மார்கள் தமிழகத்தில் ஏழை, எளியோர், குறிப்பாக, தாழ்த்தப் பட்டவர்கள் வாழ்ந்த குடியிருப்பு களுக்குச் சென்று அவர்களிடையே சமயப் பணிகள் ஆற்றியதுடன், அவர்களிடம் கல்வி, பொது சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு களை வளர்த்தனர். அவர்களில் சில குருமார்கள் தமிழ் மொழியைக் கற்க முனைந்ததுடன், அதன் அருமை, சிறப்புகளை உணர்ந்து போற்றி, அதன் வளர்ச்சிக்காக மகத்தான முறையில் தொண்டு புரிந்துள்ளனர்.

கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)

உலகெங்கும் உள்ள கிறிஸ்த வர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பெரு விழாவாக கொண்டாடுகின்றனர். தன் உயிரையே மக்களுக்காக தியாகம் செய்யும் அளவுக்கு மக்களை நேசித்தவர் இயேசு கிறிஸ்து பெருமகனார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று தேமுதிக நிர்வாகிகள், தொண் டர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு இனிப்பு, கேக்குகள், பிரியாணி போன்றவற்றை வழங்கி, சிறப்பாக கிறிஸ்துமஸ் பெரு விழாவை கொண்டாட வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

அன்பு, கருணை, சகிப்புத் தன்மையின் அடையாளமான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண் டாடும் அனைவருக்கும் வாழ்த்து கள். மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் நீங்கவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந் நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்!

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)

மக்கள் மனதில் சகோதரத்துவமும், மனித நேயமும் மேலோங்க, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனை வரும் உறுதி மேற்கொள்வோம். அனைவருக்கும் இனிய கிறிஸ்து மஸ் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்)

அனைத்து கிறிஸ்தவப் பெருமக்க ளுக்கும் வாழ்த்துகள். இயேசுவைப் போற்றும் இந்த நன்னாளில், அவர் போதித்த மாண்புகளைப் பின்பற்றி சமூக நல்லிணக்கம் பேண நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்)

கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள். சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்கிற மிகப் பெரிய பொறுப்பு மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. அந்த வகையில் அவர்களது உரி மைகளைக் காக்க கிறிஸ்துமஸ் திருநாளில் உறுதியேற்போம்.

ஜி.கே.வாசன் (தமாகா தலை வர்)

கிறிஸ்தவ மக்கள் அனை வருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்து மஸ் நல்வாழ்த்துகள்! அனைவரது வாழ்விலும் கடந்தகால இன்னல்கள் நீங்கி, இனி வரும் காலங்களில் இன்பங்கள் நிறைந்து, வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன்.

அன்புமணி (பாமக இளைஞர் அணித் தலைவர்)

அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், வளம் பெருகவும், அன்பும், கருணையும் ஓங்கவும் இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்.

ஆர்.சரத்குமார் (சமக தலைவர்)

உலகெங்கும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! கிறிஸ் துமஸ் திருநாளில் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்து, புதிய மாற்றத்தை நோக்கிச் செல்ல உறுதியேற்போம்!

பாரிவேந்தர் (ஐஜேகே நிறு வனர் தலைவர்)

இந்த உலகத்தைக் காக்க தன்னையே அர்ப்பணித்த தியாகத்தின் திருவுருவமான இயேசுபிரானின் போதனைகளை மனதில் கொள்வோம். அனைவர் வாழ்விலும் அன்பு பெருகி, ஆனந் தம் தழுவி, மகிழ்ச்சி பொங்க வேண்டும். கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர். இதுதவிர, கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் ஜி.கே.நாகராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர் கரு.பவுனாச்சாரி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ஆகி யோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x