

சட்டத்துக்குப் புறம்பாக புதிய நோட்டுகளை மாற்றித்தரும் முறை கேடுகளில் ஈடுபடும் வங்கி அதி காரிகள் கைது செய்யப்படுவர் என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத் துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் நேற்று செய்தியாளர் களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதன்முதலாக ஒரு மாநிலத் தின் தலைமை செயலகத்தில் நடந்துள்ள வருமான வரி சோதனை அதிர்ச்சியளிக்கிறது. இது துரதிர்ஷ்ட வசமானது. ஊழல் அதிகாரிகள் 5 ஆண்டுகள் சிறை செல்வது உறுதி. தமிழ்நாடு ஊழல் மாநிலமாக மாறி யுள்ளது.இது வேதனை அளிக்கிறது.
500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு மூலம் ஊழல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கப் பாடுபடுகிறார். ஊழல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை சட்டத் துக்குப் புறம்பாக மாற்றும் நட வடிக்கைகளில் ஈடுபடும் வங்கி அதி காரிகள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு துணையாக இருப்ப வர்களும் கைது செய்யப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு
கடந்த 2011-ல் காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தும் விலங் குகள் பட்டியலில் காளைகளை சேர்த்ததால் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு விளை யாட்டு நின்றுபோனதற்கு சோனியா வும், கருணாநிதியும்தான் காரணம். இப்போது திமுக அலங்காநல் லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் அறிவிக்கிறது. அதில் காங்கிரஸ் பங்கேற்பதாக திருநாவுக்கரசரும் கூறியுள்ளார். இவர்கள் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெறவேண்டும். ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இன்னும் 10 நாள்களுக்குள் நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.