

சென்னை: மாண்டஸ் புயலின் மைய பகுதி தமிழக தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புயல் கரையை கடக்க உள்ள மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் தீவிர புயலாக உருவான மாண்டஸ் வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளது. 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலினால் சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. தற்போது புயலின் வெளிப்புற பகுதிதான் கரையை கடந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.