Published : 09 Dec 2022 04:21 AM
Last Updated : 09 Dec 2022 04:21 AM

‘மேன்டூஸ்' புயல் | சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்

சென்னை: புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்கள், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் இருந்தாலும், பேரிடர் மீட்புக்கான பயிற்சி பெற்ற மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அவசியம் என கருதி அவர்களும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

இதில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4-வது படைப்பிரிவில் இருந்து 6 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதுவிர புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் தலா ஒரு குழுவினர் விரைந்துள்ளனர்.

விமான நிலையங்களில்...: மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கும் பட்சத்தில், சென்னைக்கு வரும் விமானங்களை திருப்பி விடவும், அவை தரையிறங்க ஏதுவாக ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்கள் தேவையான ஏற்பாடுகளை செய்யவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

விமான நிலையங்கள் ஆணையம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள், விமான நிலைய ஓடுதளம் மற்றும் முனைய கட்டிடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x