Published : 24 Apr 2014 08:09 AM
Last Updated : 24 Apr 2014 08:09 AM

கனிமொழிக்கு எதிரான மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதால் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக பெங்க ளூரைச் சேர்ந்த கிஷோர் கே சுவாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

‘மாநிலங்களவை உறுப் பினரான கனிமொழி, தனது வருமானத்துக்கும் அதிகமாக பெருமளவு சொத்து களை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கு மாறு கோரி மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர், நாடாளுமன்ற விவகாரத் துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனுக்களை அனுப்பினேன். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே, எனது மனு குறித்து பரிசீலித்து நடவ டிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரவைச் செயலா ளர் உள்ளிட்ட எதிர் மனுதாரர் களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x