ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏழை மக்களை பயன்படுத்தும் புரோக்கர்கள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏழை மக்களை பயன்படுத்தும் புரோக்கர்கள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை
Updated on
2 min read

ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்களை புரோக்கர்கள் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள் ளது. அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றினர். ஆனால், தற்போது வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது. வரும் 30-ம் தேதி வரை வங்கிக் கணக்கில் வரவு மட்டுமே வைக்கப்படும்.

அதேசமயம் ரிசர்வ் வங்கி யில் பழைய ரூபாய் நோட்டு களை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி புரோக் கர்கள் அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. வடசென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களை இதற்காக அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்கு அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது.

குடிசை பகுதி மக்கள்

இதுகுறித்து, ரிசர்வ் வங்கியில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள் ளிட்ட பலருக்கு தினமும் ரிசர்வ் வங்கியில் இருந்து சில்லறை வாங்கிக் கொடுப்பதற்காகவே கமிஷன் அடிப்படையில் சிலர் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தற்போது பழைய ரூபாய் நோட்டுகளையும் சேர்த்து மாற்றிக் கொடுத்து வருகின்றனர். இதற்காக அவர் கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களை பயன் படுத்தி வருகின்றனர். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட நபர் தனது பெயரில் உள்ள ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றை காண்பித்தால் போதுமானது.

அவற்றை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெற்றுக்கொண்டு பணத்தை மாற்றிக் கொடுக் கின்றனர். பணத்தை வழங்கும் போது அவர்கள் கையில் மை வைக்கப்படுகிறது. ஒருவர் ஒரு முறை பணத்தை மாற்றிய பிறகு 15 நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் பணத்தை மாற்ற முடியும். 4 ஆயிரம் ரூபாய் மாற்றிக் கொடுத்தால் 500 ரூபாய் வரை கமிஷன் கொடுக்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கியில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக நியாயமான தேவைகளுக்கு பணம் எடுக்க வருபவர்களுக்கு கிடைப்ப தில்லை” என்றனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, “நாங்கள் பணம் மாற்ற வரும் பொதுமக்களிடம் முதலில் அவர்களுடைய அடையாள அட்டையை வாங்கிப் பார்ப்பதோடு கைவிரலில் ஏற்கெனவே மை வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு பணம் வழங்கு கிறோம். இதனால் ஒருவரே அடிக்கடி பணத்தை மாற்றி னால் நாங்கள் எளிதாக கண்டு பிடித்துவிடுவோம். எனினும், புரோக்கர்கள் பணத்தை மாற்று வதற்காக பொதுமக்களை ஈடு படுத்துவது குறித்து தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in