பழனிசாமி தலைமையில் டிச.19-ல் கிறிஸ்துமஸ் விழா

பழனிசாமி தலைமையில் டிச.19-ல் கிறிஸ்துமஸ் விழா
Updated on
1 min read

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கிறிஸ்தவ மக்களை கவுரவிக்கும் விதமாக, அதிமுக சார்பில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

அவரது வழியில் இந்த ஆண்டும்,அதிமுக சார்பில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர், பழனிசாமி, டிச.19-ம்தேதி மாலை 5 மணிக்கு சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

நிகழ்ச்சியில், பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in