செங்கல்பட்டு அருகே பாலாற்று வெள்ளத்தால் இரும்புலிச்சேரி தற்காலிக தரைப்பாலம் சேதம்: 5 நாட்களாக 16 கி.மீ. சுற்றி வெளியூர் செல்லும் கிராம மக்கள்

செங்கல்பட்டு அருகே பாலாற்று வெள்ளத்தால் இரும்புலிச்சேரி தற்காலிக தரைப்பாலம் சேதம்: 5 நாட்களாக 16 கி.மீ. சுற்றி வெளியூர் செல்லும் கிராம மக்கள்
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கன மழையின்போது, செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இரும்புலிச்சேரி கிராமத்துக்கு செல்ல கடந்த ஆண்டு வீராணம் குழாய்களை கொண்டு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

தற்போது வார்தா புயலினால் கனமழை பெய்து நீஞ்சல் மடுவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதில், இரும்புலிச்சேரி தற்காலிக பால மும் அடித்து செல்லப்பட்டது. 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கப்படாததால், கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எடையாத்தூர் வழியாக 16 கி.மீ. சுற்றிக்கொண்டு நெறும்பூர் கிராமத் துக்கு செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து, இரும்புலிச்சேரி கிராம மக்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால், சின்ன மற்றும் பெரிய எடையாத்தூர், அட்டவட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 5 நாட்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டனர். அப்போதே, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத் தோம்.

இதையடுத்து, புதிய மேம்பாலம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்தது. எனினும், பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், தற்காலிக தரைப் பாலமும் வெள்ளப் பெருக்கில் கடந்த 13-ம் தேதி அடித்து செல்லப் பட்டது.

இதனால், கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் நெறும்பூர் மற்றும் திருக்கழுக்குன்றம் செல்ல எடையாத்தூர் வழியாக 16 கி.மீ. சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. புதிய பாலம் அமைத் தாலோ அல்லது தற்காலிக பாலத்தை சீரமைத்தாலோ 1 கி.மீ. பயணித்து மேற்கண்ட இடங் களுக்கு செல்ல முடியும் என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பள்ளி மாண வர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லாததால் நெறும்பூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு பள்ளி செல்ல வேண்டியுள்ளது. மாலை நேரத்தில் மீண்டும் வீடு திரும்ப போதிய பேருந்து சேவை இல்லை. இதனால், மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளனர் என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட் சியர் கஜலட்சுமியிடம் கேட்ட போது, ‘இரும்புலிச்சேரி தற் காலிக தரைப்பாலத்தை இன்று மாலைக்குள் முழுவதுமாக சீர மைக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாண வர்களுக்கு தேவைப்படும் பட்சத் தில் பேருந்து வசதிகள் ஏற்படுத்து வது குறித்து சம்பந்தப்பட்ட துறை யினருடன் ஆலோசித்து நட வடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in