எர்ணாகுளம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

எர்ணாகுளம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
Updated on
1 min read

சென்னை: எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திரவிரைவு ரயில் ஆரியங்காவு ஹால்ட் என்ற இடத்தில் கூடுதலாகநிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்புரயில் (06068-06067) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் திங்கள்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்காவுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, ஆரியங்காவு ஹால்ட்டை மறுநாள் அதிகாலை 5.01 மணிக்கும், நியூ ஆரியங்காவு நிலையத்தை அதிகாலை 5.07 மணிக்கும் அடையும். அன்றையநாள் நண்பகல் 12.30 மணிக்குஎர்ணாகுளத்தை அடையும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் நிறுத்தம் வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in