‘மேன்டூஸ்' புயல்: பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

‘மேன்டூஸ்' புயல்: பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Updated on
1 min read

ராமநாதபுரம்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் நோக்கி 12 கி.மீ. வேகத்தில் பயணித்து நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு ‘மேண்டூஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் கிழக்கே இலங்கையில் திரிகோணமலையிலிருந்து 570 கி.மீ. தொலைவிலும், தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 710 கி.மீ. தொலைவிலும், தென்கிழக்கே காரைக்காலிலிருந்து 770 கி.மீ. தொலைவிலும், தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in