

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் எம்.பால கிருஷ்ணன் (27). அங்குள்ள மருந்து நிறு வனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 16-ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவ மனையில் 17-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் 19-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவ தாக தந்தை டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து பாலகிருஷ்ண னின் உடலில் இருந்து உறுப்புகளை எடுத் தனர். சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு ஒரு சிறுநீரகத்தை பொருத்தினர். மற்றொரு சிறுநீரகம், கல்லீரல், இதய வால்வு மற்றும் கண்கள் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேருக்கு பொருத்தப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.