ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைக்கு கும்பாபிஷேகம்: 2,500 ஆண்டு பழமையான சிலையை மாற்ற எதிர்ப்பு- கோயிலில் பக்தர்கள் தர்ணா போராட்டம்

ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைக்கு கும்பாபிஷேகம்: 2,500 ஆண்டு பழமையான சிலையை மாற்ற எதிர்ப்பு- கோயிலில் பக்தர்கள் தர்ணா போராட்டம்
Updated on
1 min read

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் அமைந்துள்ளது. இங்கு 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமஸ்கந்தர் உற்சவர் சிலை உள்ளது. இந்த சிலையின் கை பாகத்தில் பின்னம் (விரிசல்) ஏற்பட்டுள்ளதால், சிலையை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், நன்கொடையாளர் கள் மூலம் புதிய உற்சவர் சிலை அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழைய சிலையை மாற்றாமல் புதுப்பிக்க வேண்டுமே தவிர புதிய சிலை அமைக்கக் கூடாது என காஞ்சி பக்தர்கள் சேவா சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர். இவ்வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், கோயில் நிர் வாகத்தினர் புதிய உற்சவர் சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, காஞ்சி பக்தர்கள் சேவா சங்கத் தினர் கோயில் நிர்வாகத்திடம் முறையிட சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் கோயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, காஞ்சி பக்தர்கள் சேவா சங்கத்தின் சிறப்பு தலைவர் ரகு கூறியதாவது: கோயிலில் உள்ள பழமை வாய்ந்த உற்சவர் சிலையை பின்னம் எனக்கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கோயில் நிர்வாகத் தினர் பிரசித்த பெற்ற கோயிலில், தன்னிச்சையாக திடீரென புதிய சிலைக்கு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதனால், கோயில் நிர்வாகத்தை கண்டித்து தர்ணாவில் ஈடுபட் டோம். சிலை கடத்தல் தொடர்பாக பல்வேறு நபர்கள் சிக்கி வரும் நிலையில், உற்சவர் சிலையை கோயில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

விளக்கம்

இதுகுறித்து, ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலரிடம் கேட்டபோது, ‘புதிய உற்சவர் சிலை ஏற்கெனவே செய்யப்பட்டு விட்டது. அடுத்து வரும் நாட் கள் வழிபாட்டுக்கு உகந்த நாட் களாக இல்லாததால், ஆணைய ரின் அனுமதியோடு புதிய சிலைக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளோம். நீதிமன் றத்தை அவமதிப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in