வரி வருவாய் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

வரி வருவாய் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
Updated on
1 min read

கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விவகாரத்தில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார். ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கத்தால் வரி வருவாய் பாதிக்கப்பட்ட மாநிலங் களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கௌடா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் புதுச்சேரி கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

முதல்வர் நாராயணசாமி கூறிய தாவது: பிரதமர் மோடியின் நடவடிக் கையால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ஜேட்லியிடம் தெரிவித்துள்ளேன். 4 சதவீதம் கறுப்புப் பண புழக்கம் இந்தியாவில் உள்ளது என ஜேட்லி தெரிவித்தார்.

பண அட்டை வைத்துள்ளவர்கள் 2.5 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத் தில் கொண்டு வந்த வளர்ச்சி மோடி ஆட்சியில் மீண்டும் குறைந்துள்ளது. பிரதமரும், நிதி அமைச்சரும் கற்பனை உலகத்தில் சஞ்சரித்து வருகின்றனர். கறுப்புப் பண ஒழிப்பில் பிரதமருக்கு முழு ஆதரவு தருகிறோம். ஆனால் இதற்காக எடுத்த நடவடிக்கைகளே தவறு.

எவ்வளவு கறுப்புப் பணத்தை கொண்டு வந்துள்ளீர்கள்? எவ்வளவு பேர் இறந்துள்ளனர்? போன்ற கேள்விகளுக்கு மோடி பதில் தர வேண்டும். கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவரும் விவகாரத்தில் மோடி தோல்வி அடைந்துள்ளார். ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கத்தால் வரி வருவாய் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

கர்நாடக எம்பி ராஜீவ் கெளடா கூறியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளா தாரம் நிலைகுலைந்துள்ளது. திருப் பூர், சூரத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். மேலும் வாங்கும் சக்தி இருந்தும் பணம் இல்லாததால் மக்கள் செயலிழந்த நிலையில் உள்ளனர். மோடியின் நடவடிக்கை பொருளாதார தற் கொலையாகும், 50 நாட்களுக்கு பின்னரும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in