Published : 22 Dec 2016 12:27 PM
Last Updated : 22 Dec 2016 12:27 PM

தமிழக புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்: இன்று பொறுப்பேற்கிறார்

தமிழக புதிய தலைமைச் செயலாளராக நில நிர்வாகத்துறை ஆணையர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்ட்டுள்ளார்.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக கடந்த ஜூன் 9-ம் தேதி நியமிக்கப்பட்டவர் பி.ராமமோகன ராவ். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் செயலாளராக இருந்து, தலைமைச் செயலாளராக நியமிக் கப்பட்டார். நேற்று முன்தினம் இவரது வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலக அறை மற்றும் மகன், உறவினர் களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக பொதுத்துறை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், தலைமைச் செயலாளராக பி.ராமமோகன ராவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ராமமோகன ராவ் கூடுதலாக கவனித்து வந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆணையர் பதவிகளையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

தமிழக அரசின் 45-வது தலைமைச் செயலாளராக நியமிக் கப்பட்டுள்ள கிரிஜா வைத்திய நாதன், இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்கிறார். தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ், காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x