டிச.13-ம் தேதி மிலாடி நபி விடுமுறை: தமிழக அரசு

டிச.13-ம் தேதி மிலாடி நபி விடுமுறை: தமிழக அரசு
Updated on
1 min read

தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவுறுத்தல் படி, டிசம்பர் 12-ம் தேதிக்கு பதில் 13-ம் தேதி மிலாடி நபிக்கான பொது விடுமுறை விடப்படுவதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் பண்டிகையான மிலாடி நபிக்கான பொது விடுமுறை இந்தாண்டு டிசம்பர் 12-ம் தேதி என செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 30-ம் தேதி, இதற்கான பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, மிலாடி நபி, டிசம்பர் 13-ம் தேதி கொண்டாடப்படுவதாக, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் அடிப்படையில், செலலாவணி முறிச்சட்டத்தின் படி, டிசம்பர் 12-ம் தேதிக்கு பதில், டிசம்பர் 13-ம் தேதி மிலாடி நபிக்கான பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in