Published : 06 Dec 2022 06:39 AM
Last Updated : 06 Dec 2022 06:39 AM

தி.மலை | தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி சங்கர் ஆய்வு

அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருபவர்களை சோதனையிட வைக்கப்பட்டுள்ள டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் கருவியின் செயல்பாடுகளை நேற்று ஆய்வு செய்த ஏடிஜிபி கி.சங்கர். அருகில் ஐஜி கண்ணன் உள்ளிட்டோர். படம்: இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா இன்றுநடைபெறவுள்ள நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஏடிஜிபி கி.சங்கர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அண்ணாமலையார் கோயிலுக்கு விவிஐபிக்கள் வருகை தரவுள்ளனர். இதையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏடிஜிபி கி.சங்கர் நேற்று ஆய்வு செய்தார்.

அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களை ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிப்பது வழக்கம். அப்போது, டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் கருவி வழியாக நுழையசெய்து பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

அந்த கருவியின் செயல்பாடு குறித்து, பணியில் இருந்த போலீஸாரிடம் ஏடிஜிபி கி.சங்கர் கேட்டறிந்தார். அப்போது அவர், பக்தர் ஒருவரை அழைத்து, அவரிடம் இருந்த செல்போன் உள்ளிட்ட அனைத்தையும் வெளியே வைத்துவிட்டு டோர் பிரேம் டிடெக்டர் கருவிவழியாக நுழைய அறிவுறுத்தினார். அதன்படி, அவரும் நுழைந்து வந்தார். பின்னர், கையில் இரும்பு பொருளை கொடுத்து வர செய்தார். அப்போது, இரும்பு கொண்டுவருவதை சமிக்ஞை கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஏடிஜிபி கி.சங்கர், ‘உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கீடு செய்கிறது. பிறபொருட்கள் கொண்டு வருவதையும் சமிக்ஞை மூலம் அடையாளம்காணும் வகையில் இயந்திரம் செயல்பட வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஐஜி கண்ணணுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர், கோயில் உள் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x