

இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 200 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் பயணம் செய்தவர்கள், அவர்களின் உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, கொழும்புவைச் சேர்ந்த முகமது இசான், ஆசன வாயில் வழியாக உடலுக்குள் தலா 100 கிராம் எடையுள்ள 2 தங்கக் கட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.