

வங்கிகளில் பணத் தட்டுப்பாடு பிரச் சினையை மத்திய அரசு தீர்க்கவில்லை எனில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரி கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று சென் னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்டு 50 நாட்கள் ஆகியும் இதுவரை இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இப்பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, தேவையான அளவு பணத்தை முழு அளவில் அச்சடித்து வழங்க வேண்டும். ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கு வதற்குப் பதிலாக டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் இந்திய பொருளா தாரத்தை மேம்படுத்தலாம் என நினைப்பது தவறு.
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் நோட்டுகளாக பணப் பரிவர்த்தனையை செய்யவே விரும்புகின்றனர். கார்டுகளைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய் வது பாதுகாப்பற்ற நிலையாக உள்ளது. ஏற்கெனவே, 30 லட்சம் கார்டுகளின் ரகசிய எண்கள் திருடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 48 மணி நேரத்தில் அனைத்து ஏடிஎம்களும் செயல்படும் என அறிவித்தார். ஆனால், 48 நாட்கள் ஆகியும் இதுவரை ஏடிஎம்கள் முழுமை யாக செயல்படவில்லை.
எனவே, அனைத்து வங்கிகளுக்கும் தேவையான அளவு பணத்தை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும். வங்கிகளுக்கு பணம் விநியோகிப்பதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும். முக்கியப் புள்ளிகளிடம் அதிகளவில் புதிய ரூபாய் நோட்டுகள் சென்றது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று கடிதம் எழுதும் போராட்டமும், ஜன.2-ல் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், 3-ல் மாநில தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். கோரிக் கைகளை நிறைவேற்றவில்லை எனில் அடுத்த கட்டமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.