ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு?

ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு?
Updated on
2 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு உள்ளிட்ட சொத்துகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப் பட்டது. கடந்த சட்டப்பேரவை தேர் தலில் ஜெயலலிதா போட்டியிடும் போது அவர், தன்னை சார்ந்தவர் கள் யாரும் இல்லை என குறிப் பிட்டுள்ளார். வங்கி மற்றும் கூட் டுறவு வங்கிகளில் ரூ.10 கோடியே 63 லட்சத்து 83 ஆயிரத்து 945 வைப் புத் தொகை இருப்பதாகவும், அது வழக்கின் கீழ் முடக்கப்பட்டிருப்ப தாகவும் தெரிவித்துள்ளார்.

ரூ.45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான ஒன்பது வாகனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத், ரங்கா ரெட்டி மாவட்டத்தில், ரூ. 14 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 300 மதிப்புள்ள நிலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பகுதியில், ரூ.34 லட்சம் மதிப்பிலான நிலம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போயஸ் தோட்டம் பகுதியில் கடந்த 1967-ல், ஜெயலலிதாவும் அவரது தாயார் சந்தியாவும் இணைந்து 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) நிலத்தை ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் வாங்கியுள்ளனர். அந்த இடத்தில் கட்டப்பட்ட வீட்டில் அவர் வசித்து வந்தார். அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.43 கோடியே 96 லட்சத்து 74 ஆயிரத்து 900 ஆகும். இதுதவிர, போயஸ் தோட்டம், ஐதராபாத் நகர் காலனி, தேனாம்பேட்டை பார்சன் மேனர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும் வர்த்தக கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ஆகும்.

இதில், போயஸ் தோட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.90 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. அவர் தனது வாரிசு என யாரையும் அறிமுகப்படுத்தாத நிலையில், இந்த சொத்துகள் தற்போது யாருக்கு என்ற சந்தேகம் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. அதேநேரம், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பதும் கட்சியின் ஒரு பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.

பொதுவாக, ஒரு சொத்து தொடர் பாக உயில் எழுதி வைக்கப்பட்டால், உயிலில் குறிப்பிடப்படும் நபருக்கு நேரடியாக அந்த சொத்து சேர்ந்துவிடும். இதில், சிக்கல்கள் எழுந்தால் மட்டுமே நீதிமன்றத்தை நாட வேண்டும் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

சொத்து பகிர்வு தொடர்பாக தென்னிந்திய அறிவுசார் சொத் துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் பெரும்புலவில் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஒரு குடும்பத் தலைவர் உயில் எழுதி வைத்திருந்தால் அந்த சொத்துகளை உயில்படி பிரித்துக் கொள்ளலாம். உயில் எழுதி வைக் காமல் சிலர் தான செட்டில் மென்ட் எழுதி வைத்திருந்தால், அந்த சொத்து சம்பந்தப்பட்ட நபருக்குத் தான் சேரும். அந்த சொத்தை வாரிசுகள்கூட பெற முடியாது. உயில் எழுதி வைக்கப்படாத பட்சத்தில் பாகப்பிரிவினையை அவர்களாகவே செய்து கொள்ளலாம். ரூ.25 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள சொத்துகள் இருந்தால் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும்.

சட்டப்படி, வாரிசு அடிப்படையில் முதல் வாரிசுகளாக தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகள் வருவார்கள், அடுத்ததாக சகோ தரி, சகோதரன், 3-வது வாரிசாக சகோதரி, சகோதரன் பிள்ளைகள் வருவார்கள். இவர்களில் யார் இருக்கிறார்களோ அவர்கள் சொத்துக்காக உரிமை கோர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in