

ஒரு சிறந்த பெண், தலைவி மற்றும் நிர்வாகி என்று ஜெயலலிதாவுக்கு நடிகர் விஷால் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், "மிகக் குறைந்த வயதில் சென்றுவிட்டார்.
அம்மா ஜெயலலிதா ஒரு சிறந்த பெண், தலைவி மற்றும் நிர்வாகி. என்னுடைய ஆழ்ந்த இரங்கல். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்துள்ளார்.