

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் மெரினாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 5,000 அரசு வேலைகளை உருவாக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள தற்காலிக பணியிடங்களில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள், உரிமை மீட்பு போராட்டம் என்ற பெயரில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.